life quotes in tamil | kavithai in tamil

Image
   LIFE QUOTES IN TAMIL   வீணாக கோவப்பட்டு குரலை  உயர்த்தி பேசிவிட்டாய் என்றால்  வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல  தாங்கி கொண்டவரின் பொறுமை  வென்றது என்று அர்த்தம். 

அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள் | Appa kavithaigal




 

               அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள்

                 (அப்பா தமிழ் கவிதை வரிகள்)

                   (அப்பா கவிதை தொகுப்பு)

 

அப்பா யாரும் ஏறி

அமர முடியாத சிம்மாசனம்

என் மனதில் என்றும்

உங்களுக்கு மட்டுமே சொந்தம்

அப்பா.

 

தன் பிள்ளையின் முகத்தை பார்த்தே

மனநிலையை அறிய மனம்

உங்களுக்கு மட்டுமே உள்ளது

அப்பா.

  

அப்பா என் பிள்ளை

வளரும் போது தான்

தெரிகிறது தந்தையின் அருமை.

 

 

 

உன் அருமை உன்னை

விட்டுப் பிரிந்த பிறகு

மன வலியை (வழியை) கொடுக்கிறது.

  

உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன்

நான் என்ற சுயநலம்

இல்லாத உன்னிடம் இருந்து

அப்பா.

  

என்னை விட என் மேல்

அதிக நம்பிக்கை வைத்து

எனக்கு நம்பிக்கை என்னும்

ஊக்கத்தை கொடுக்கின்ற

கொடுக்கும் உறவு ஒன்று

இருக்குமானால் நீ மட்டுமே

அப்பா.

 

அப்பா நம்மிடம் கை நிறைய

காசு இல்லை. ஆனால்

என்றுமே நீ  நம்ம

வீட்டு செல்ல ராணியாக

உணர வைத்து இருக்கிறாய்.

  

தாயிடத்தில் தாய்மையை

உணர்ந்தேன்.

தந்தையிடத்தில் தாய்மையை பார்த்தேன்

பல இடங்களில்

தாயாகிய என் தந்தைக்கு

தந்தையர் தின வாழ்த்துக்கள். 

 

 

 

பாசத்தை கூட சில

நேரம் கோபமாக வெளிப்படுத்தும்

என் பாசக்கார தந்தைக்கு

தந்தையர் தின வாழ்த்துக்கள்.

 

நான் ரசித்த வெள்ளை வேட்டி

வெள்ளை சட்டை

என் அப்பாவின் உடையில் மட்டுமே.

 

பள்ளிப்பருவத்தில் உன்னுடன் பள்ளிக்கு

சென்று வந்த நாட்கள்

மீண்டும் வராதா என்று

என் மனம் ஏங்குகிறது

அப்பா.

 

கல்லூரி விட்டு வீடு

வர நேரம் ஆனால்

எனக்காக வீட்டு வாசலில்

காத்து கிடப்பாய் தெருமுனையில்

நான் தெரிந்ததும் நீ

படும் இன்பத்துக்கு அளவே

இல்லை உன்னை போல்

எவரொருவர் எனக்காக இருப்பார்

அப்பா.

 

 

 

அம்மா படும் துன்பம்

நம்மால் அடையாளம் காணமுடியும்

அப்பா நீ பட்ட துயரங்கள்

மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும்

துயரங்களை தனக்குள்ளே மறைத்துக்கொண்டு

எங்களைக் காக்கும் சாமி நீ

அப்பா.

 

அப்பா உன் பாசம்

வானளவு அளக்க முடியாது.  

உன் பாசம் நடுக்கடல்

போல வெளியே தெரியாத

அவ்வளவு ஆழம் அப்பா.

 

அப்பா என் கனவுகளோடு பயணித்தாய்

எனக்காக பயணித்தாய்

என் தேவையை பூர்த்தி செய்தாய்

இப்பொழுது

என் பிள்ளைகளுக்காக பயணிக்கிறாய்

என் பிள்ளையின் கனவுகளையும் பார்க்கிறாய்

அப்பா உனக்காக என்று

நீ வாழவே இல்லை

அப்பா.

 

அப்பா நீ மட்டுமே

எங்கள் உலகம் அப்பா.

உன் இடத்தை யாராலும்

நிரப்ப முடியாது.

 

எதைப் பற்றியும் கவலை

கொள்ளாத மழலைப் பருவ

நாட்கள் மீண்டும் வாழ்கையில்

திரும்ப வராதா என்று

ஆவலாக உள்ளது அப்பா.

 

இந்த கவிதை தொகுப்பு தந்தை பற்றிய தொகுப்பு ஆகும். நமக்கு என்ன வயது அனாலும் நாம் பல நேரங்களில் நமது தந்தை பற்றிய தந்தையுடன் வாழ்ந்த நாட்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்ற பாடங்கள் நம் வாழ்க்கை முழுதும் நமக்கு உதவியாக இருக்கும். அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு இந்த கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.


Comments

Popular posts from this blog

அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை | amma kulanthai kavithai in tamil | babies tami kavithai

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் | மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் | Happy Doctor’s Day quotes in tamil | Happy Doctors Day wishes in tamil

long distance relationship kavithai in tamil | husband and wife long distance relationship kavithai