life quotes in tamil | kavithai in tamil

Image
   LIFE QUOTES IN TAMIL   வீணாக கோவப்பட்டு குரலை  உயர்த்தி பேசிவிட்டாய் என்றால்  வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல  தாங்கி கொண்டவரின் பொறுமை  வென்றது என்று அர்த்தம். 

அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை | amma kulanthai kavithai in tamil | babies tami kavithai

 அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை

 

அம்மா குழந்தை கவிதை தமிழ்: 

அம்மா குழந்தை கவிதை: 

குழந்தை கவிதை:

தமிழ் குழந்தை கவிதை : இந்த கவிதை அம்மாவின் அன்பையும் குழந்தையின் அன்பையும்  கவிதைகளாக வெளிப்படுத்தும்.

 

உன் முகத்தை பார்க்கும் பொழுது

மட்டும் மனக்கவலைகள்

பறவைகளாக பறந்து போகின்றன.

 

குறும்புகளை செய்துவிட்டு நீ

பார்க்கும் ஓரப்பார்வையும் கள்ளச்சிரிப்பும்

என் கோபத்தை சிரிப்புகளாக மாற்றுகின்றன.

 

கைவிரல் பிடித்து நடக்கும்

பொழுது எனக்கே எனக்குள்

ஒரு மகிழ்ச்சி வருகிறதடா தங்கமே

இந்த நாளுக்காக தானடா

என் தங்கமே நான் காத்துக் கிடந்தேன்.

 

உன் கால்களுக்கு வலிக்காதா

நீ இளைப்பாராமல் சுட்டி விளையாட்டுகளை 

விளையாடுகிறாய் என் அன்பே.

 

உன் பார்வை ஒன்றே போதும்

என் மனதை மாற்ற

மனதை மாற்றும் சக்தி

உன்னிடமே உள்ளது என் செல்லமே.

 

உன் கால் கொலுசுகள்

எனக்கு முக்கியம் நீ

வீட்டினுள் எங்கு போகிறாய்

என்பதை என்பதை எனக்கு

இந்த ஓசை மட்டுமே காட்டிக் கொடுக்கும்

என் மழலை தங்கமே.

 

சிரித்தே மயக்குகிறாய் உன் சிரிப்புக்கு

ஏதும் சக்தி உள்ளதா.

  

செய்கிற எல்லா சேட்டைகளும்

செய்துவிட்டு அப்பாவி போல்

முகத்தை வைத்துக் கொள்வது

எப்படி என்று வியப்பை

உண்டாக்குகிறது அன்பே.

 

கடவுள் வழங்கிய பெரிய பரிசு

நீதான் என் உயிரே.

 

மகனே உன் முதல்

காதலி நான் தான்

உன் முகத்தை பார்க்காமலே

நீ கருவில் இருக்கும்

போதே உன்னை காதலித்த

முதல் பெண் நான் தான். 

 

துயரத்தில் கிடப்பவரை தூக்கி விடுவதில்

வல்லமை பெற்ற கடவுள் குழந்தை.

 

முதுகில் குத்தாத

துரோகம் இழைக்காத

பாசாங்கு செய்யாத

கள்ளத்தனம் இல்லாத

நேரத்திற்குத் தகுந்தாற்போல்

மாறி பேசிடும் சில உறவுகள்

மத்தியில் மனதுக்கு சந்தோசம்

தரும் உறவு குழந்தை மட்டுமே.

 

பஞ்சு மெத்தை போல்

தொட்டிலில் அசந்து தூங்கும் அழகை

காண்பதற்கு ஆயிரம் கண்கள்

இருந்தாலும் பத்தாது.

 

உன்னுடன் விளையாடி தோற்றுப்

போக தயாரடா நீ வென்ற

உணர்வில் உன் அழகை ரசிக்க.

 

ரசனை என்பதை கற்றுக்கொடுத்தவனே

நீதானடா.

 

சாரல் மழை விழும் பொழுது

உன் பிஞ்சு கால்களை எட்டி

வைத்து ஓடிவிடுவாய்

பார்த்து வியந்து ரசிப்பாய்

தூரத்தில் பறவை பறந்து

வரும் போதே உன் கண்ணில்

அகப்பட்டு விடும் அம்மா ம் ம் ம் ம் என

மழலை பேச்சில் பேசுவாயடா.

 

நித்திரையில் பௌர்ணமி நிலா

போன்ற அழகு கண்டேன்

பிரபஞ்சத்தின் அத்தனை அழகும்.

 

அற்புதமே தத்தித் தவழ்ந்து

தரை தொடும் உன்னை

கையில் ஏந்திடுவேன்

என் ஆயுள் உன்னோடுதான்.

 

எட்டு வைத்து என்னை

எட்டி விட்டாய் உன்னோடு

நடை பழக ஆசைப்பட்டேன்

உன் அம்மாவுக்கு நீ

இப்போது ஓட்டப் பந்தயம் அல்லவா வைக்கிறாய்.

 அறமொழி 

 

இந்த கவிதை தொகுப்பு தாய் தனது குழந்தையின் மழலை குறும்புகள் பற்றி கவிதைகளால் வர்ணிப்பது ஆகும். குழந்தைகளை அதிகமா நேசிப்பவர்களுக்கு இந்த குழந்தை கவிதை தொகுப்பு உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

long distance relationship kavithai in tamil | husband and wife long distance relationship kavithai

alone quotes in tamil | thanimai kavithaigal | thanimai kavithai | தனிமை கவிதைகள்