வெளிநாட்டு அப்பா கவிதை | அப்பா கவிதை | appa kavithai | Velinadu appa|
- Get link
- X
- Other Apps
வெளிநாட்டு அப்பா கவிதை
வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் கவிதை:
வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் ஏக்க கவிதை:
அப்பாவின் தொலைதூர பிரிவு கவிதை:
அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்:
வெளிநாட்டு அப்பாக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்:
வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் ஏக்க கவிதை: இந்த கவிதை
தொகுப்பு அப்பாவின் அன்பையும் பிள்ளையின் அன்பையும்
கவிதைகளாக வெளிப்படுத்தும்.
அப்பா
மீனாய் நான் பிறந்திருந்தால்
கடலில் நீந்தியே உன்னிடம்
வந்து இருப்பேன்.
பறவையாய் பிறந்திருந்தால்
பறந்து வந்து பார்த்து இருப்பேன்.
உன்னை நான் தினந்தினம்
தேடுகிறேன் வேதனையில் வாடுகிறேன்
நீ வேண்டும் அப்பா.
பிள்ளைக்கு என்ன உணவு
மூணு வேளையும் அக்கறையா
அம்மாகிட்ட நீயும் தான் கேக்குற
சத்தானது சாப்பிடணும்னு
அனுதினமும் சொல்லுற
என்னையே நீ நெனச்சு ஏங்குற
அப்பா.
பிள்ளைக்கு மிதிவண்டி
வாங்கிக்கொடுத்து ஓட்ட பழக சொல்லுற
சட்டை ஒன்னு வாங்கி அனுப்பி
என் பிள்ளைக்கு சரியான
அளவு தான் அனுப்பி இருக்குமான்னு
சந்தோசம் தான் பட்டுகிற
பொம்மை தான் வாங்கி அனுப்பி
அழகு பார்த்து ரசிக்கிற அப்பா.
நீ என்ன சாப்பிடுவனு
நானும்தான் தெரிஞ்சுக்கணும்
உன் ருசியை மறந்துட்டு
பசிக்காக தான் நீ சாப்பிடுற
சாப்பிட்டியானு நான் கேட்டா
சாப்பிட்டேன் பா மட்டும் தான்
நீ சொல்லுற
உன் தியாகம் தெரியலைன்னு
ஒருநாளும் நினைச்சுடாத
நாம சேர்ந்து சாப்பிடுறத
எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
அப்பா.
உடம்பு சரியில்லைன்னா
அங்கதான் யாரு இருக்கா
சோர்வுனா யாரு கிட்ட
நீயும் சொல்லுவ அப்பா
நான் என்னை பாத்துக்குவேன்
எனக்கு ஒன்னும் பிரச்சனை
இல்லைன்னு நீயும் தான் சொல்லுவ
எனக்கு தான் வலிக்குது அப்பாஉன் கூட
இருக்கணும்னு என் மனசு ஏங்குதப்பா.
அப்பா உன் கனவை தொலைச்சுட்டு
குடும்பத்துக்காக பாடுபடுற
சந்தோசமா இருக்கோம்னு
மத்தவங்க நினைக்கிறாங்க
நீ எங்க கூட இருக்கிறது
தான் எங்களுக்கு சந்தோசம்.
அப்பா மெழுகாய் நீ உருகி
ஒளியைத் தான் தந்திடுற
appa kavithai |
"அப்பா உன்னை சீக்கிரமா பார்த்திடனும்
நேரில் உன்னை கொஞ்சிடனும்
நாம சேர்ந்து சாப்பிடனும்
உணவு எனக்கு ஊட்டிவிடனும்
உன் கை பிடிச்சு பார்த்திடனும்
கை கோர்த்து நடந்திடனும்.
மோட்டார் வண்டியில பயணம்
தான் செய்திடனும்
பூங்காவுக்கு போயிடனும்
நாம சேர்ந்து சேர்ந்து விளையாடிடனும்
பள்ளிக்கு நீயும் கூட்டி
போய்விடனும்
வரேன்னு வரேன்னு சொல்லி
என்னை ஏமாற்றி விடாதே
நீ எப்போ வரேன்னு
இங்க உனக்காக காத்து கிடக்கேன்
காணொளி கட்சியில் உன்னுடன்
பேசுவதற்கு விடை பெற்றிடனும்
நேரில் உன்னுடன் பேசிடனும்
இதெற்கெல்லாம் நீயும் தான் வெளிநாட்டில் இருந்து வந்திடனும்".
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பாவுக்கு தன் பிள்ளையின் தொலைதூர பிரிவு ஏக்க கவிதை.தனது தந்தை படும் வலியை உணர்ந்து எழுதப்பட்ட கவிதை ஆகும். அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கும் இந்த கவிதைவரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். ஒவ்வொரு நொடியும் தன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் மனதிலேயே சுமந்துகொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment